முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனங்களுக்கு பட்டா மாறுதல்: வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,ஆக.23 - கிரானைட் குவாரி நிறுவனங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டா மாறுதல் செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து மேலூர் வட்டாட்சியர்கள் மற்றும் விஏஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கிரானைட் குவாரிகள் ஆய்வின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் பிஆர்பி கிரானைட் மற்றும் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் தொடர்பான நிலப்பட்டா மாறுதல் கோப்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கோப்புகளை துணை வட்டாட்சியர் நிலையில் குழு நியமனம் செய்யப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணிப்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

   இந்த ஆய்வுக்காக கோப்புகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டா மாறுதல்  செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அதற்கு பொறுப்பான மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து 21.08.2012 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் வருமாறு, 1.ருக்மணி(வட்டாட்சியர்) 2. மோகன்( துணை வட்டாட்சியர்) 3. கே.சுப்புராஜ்(விஏஓ, கீழவளவு) 4.வி.வி.செல்வராஜ்(விஏஓ, சருகுவலையப்பட்டி) 5. ஏ.சேட்பாபு(விஏஓ, தெற்குதெரு) 6.பொன்னையா(விஏஓ, சொக்கம்பட்டி).

   மேலும் பட்டா மாறுதல் கோப்புகளை வைப்பறையில் சரியாக பராமரிக்காத மற்றும் ஆய்வுக்கு சமர்ப்பிக்காத சம்பந்தப்பட்ட வைப்பறை பிரிவு அலுவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரை 21 ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வருமாறு, 1.ராஜேந்திரன்(இளநிலை வருவாய் உதவியாளர்) 2.பாலசுப்பிரமணியன் (வைப்பறை எழுத்தர்) 3.முத்துகிருஷ்ணன்( அலுவலக உதவியாளர்).

   மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டா மாறுதல் செய்யப்பட்டடது கண்டறியப்பட்டு அதற்கு பொறுப்பான ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள் ராஜேஸ்வரி, கா.ஸ்ரீதரன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் தில்லை நடராஜன், குழந்தைவேலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கர்ணன், பரந்தாமன், எம்.பாண்டியன் ஆகியோர் மீதும் அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்