முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.பாலசந்தர் உள்பட கலைஞர்களுக்கு சிவாஜி நினைவுப் பரிசு:ரோசய்யா வழங்குகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, செப்.- 30 - நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் கே.பாலசந்தர் உள்பட முன்னணி கலைஞர்களுக்கு சிவாஜி நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. ஆளுநர் ரோசய்யா பரிசுகள் வழங்குகிறார். இயக்குநர் கே.பாலசந்தர், தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியம், நடிகர் கே.வி.சீனிவாசன், ஊடகத்துறை டி.எஸ்.நாராயணசாமி, நடிகை காஞ்சனா ஆகியோருக்கு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான விழா அக்டோபர் முதல் தேதியன்று மாலை 6.30 மணியளவில் 18, டி.டி.கே.ரோடு, மியூசிக் அகாடமி, சென்னையில் நடைபெறுகிறது. சிவாஜி டிரஸ்ட் சார்பில் ஜி.ராம்குமார், ஜி.பிரபு, கிரிசண்முகம் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony