முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை இறுதி: ஆஸ்., அணியை மே.இ.தீவு சமாளிக்குமா?

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். 5 - டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்க இருக்கும் 2-வது அரை இறுதிப் போட்டியில் ஆஸ் திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. ஐ.சி.சி. சார்பிலான 20 -க்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங் கையில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையைக் கைப்பற்ற 12 அணிகள் களம் இறங்கின. முதலில் லீக் ஆட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந் து சூப்பர் - 8 ஆட்டம் நடந்தது. தற்போது அரை இறுதி ஆட்டம் நடந்து வருகிறது. நேற்று முதல் அரை இறுதி நடந்தது. இதில் இலங்கை மற்றும் பா கிஸ்தான் அணிகள் மோதின. இன்று நடக்க இருக்கும் இரண்டாவது அரை இறதியில் கேப்டன் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மற்றும் கேப்டன் டேரன் சம்மி தலை மையிலான மேற்கு இந்தியத் தீவு அணியும் மோத ஆயத்தமாக உள்ளன. 4 முறை 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒரு முறை கூட டி - 20 கோப்பையை வென்றது கிடையாது. எனவே இந்த முறை கோப்பையை வெல்ல ஆர்வ மாக உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 80 -க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பின்தங் கியே உள்ளது. எனவே அதன் ரசிகர்கள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து போன்ற இதர விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி இழந்த புகழை நிலை நாட் ட இது போன்ற பெரிய போட்டிகளில் வெற்றி பெற முய ற்சிக்கிறது. எனவே இந்த அரை இறுதி யில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. கடும் சவாலை அளிக்க காத் திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரா ன ஷேன் வாட்சன் இந்தப் போட்டியில் நன்கு பேட்டிங் செய்து வருகிறார். அவ ர் 5 போட்டியில் ஆடி 4 ல் ஆட்டநாயக ன் விருதினைப் பெற்று இருக்கிறார். இந்தத் தொடரில் அவர் இதுவரை மொத்தம் 242 ரன்னையும், 11 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார். அவர் தொடர் நாயகனாக தேர்வாகவும் வாய்ப்பு உள்ளது. மேற்கு இந்தியத் தீவின் துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடக் கூடி யவர். அவர் நிலைத்து நின்று ஆடினால் எந்த ஒரு பெளலரையும் நார் நாராகக் கிழிக்கக் கூடியவர். ஆட்டத்தின் போக் கையை மாற்றக் கூடியவர். மே.இ.தீவின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல் இந்தத் தொடரில் இதுவரை இரண்டு அரை சதம் அடித்து இருக்கிறார். தவிர, 5 சிக்சர்களையும் விளாசி இருக்கிறார். இன்று நடக்க இருக்கும் 2-வது அரை இறுதிப் போட்டி ஷேன் வாட்சன் மற் றும் கிறிஸ் கெய்ல் இருவருக்கும் இடையேயான போட்டியாக இருக்கு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் மே.இ.தீவு ஆகிய இரு அணிகளும் இறுதிச் சுற்றில் இடம் பெற கங்கணம் பூண்டுள்ளன. எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய த் தீவுகள் அணிகளுக்கு இடையே இன் று நடக்க இருக்கும் 2-வது அரை இறுதி ப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலி ல் இரவு 7.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்