முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு - 5 பேர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. ஏப்.14 - 2 ஜி.  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 கம்பெனிகளின் முக்கிய நிர்வாகிகள்  தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு செய்துள்ளனர். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ரூ.1.76  லட்சம் கோடி ஊழல் வழக்கில் தி.மு.க.வை  சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா ஏற்கனவே கைது செய்யப்பட்டு டெல்லி திகாரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரோடு மேலும் சிலரும் கைது செய்யப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழல் வழக்கில் ஏற்கனவே 80 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை  சி.பி.ஐ. கோர்ட்டில்  சி.பி.ஐ.அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யூனிடெக் ஒயர்லஸ்  ( தமிழ் நாடு ) நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ்  அடாக் குழுமத்தை சேர்ந்த  கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர்  ஆகிய 5 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

 இவர்கள் 5 பேரும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முதல் முறையாக நேரில் ஆஜரானார்கள்.

தாங்கள் சி.பி.ஐ. விசாரணையின் போது கைது செய்யப்படவில்லை என்றும் அதனால் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களது ஜாமீன் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த 5 குற்றவாளிகளும் ஜாமீனில் ரிடுதலையாக தகுதியானவர்கள் என்று  வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  முகுல் ரோத்தஹி  தெரிவித்தார்.

 இதே போல மற்ற 4 பேரின் வழக்கறிஞர்களும்  தங்களது  கோரிக்கையை  எடுத்துரைத்தனர்.

நீதிமன்றபத்தில் நேரில் ஆஜராகியதால் மட்டும் இவர்கள் 5 குற்றவாளிகளுக்கும் ஜாமீன் வழங்கிவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள  சிறப்பு அரசு  வழக்கறிஞர்  யு.யு. லலித் எதிர்ப்பு தெரிவித்தார்.

 ஜாமீன் தொடர்பான சட்ட விதிகளை சுட்டிக்காட்டிய லலித்

சந்தேகத்திற்கிடமான இந்த 5 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்  பெற்றுள்ளதால் இவர்கள் அனைவரும் இப்போது குற்றவாளிகளாக ஆகி விடுகிறார்கள். எனவே இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்திற்கும்  குற்றவாளிகளுக்கும் இடையே இருக்கிறது.  எனவே இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதற்கான சரியான காரணத்தை கூறலாம் என்றும் லலித் கூறினார்.

இந்த வாத பிரதி வாதங்களை கேட்ட சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஓ.பி.சைனி  இது தொடர்பாக  சி.பி. ஐ. தது பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் இது தொடபர்பான அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15 ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்