பிரிஸ்பேன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே சாம்பியன்!

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்ட்ரேலியா, ஜன - 6 - ஆஸ்ட்ரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றை சாம்பயின் பட்டத்தை இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரமான பல்கேரியாவின் 21 வயது டிமிட்ரோவை உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஆண்டி முர்ரே எதிர்கொண்டார்.
முதல் செட்டில் 4-1 என்று முன்னிலை பெற்று முர்ரேவிற்கு அதிர்ச்சி அளித்தார் டிமிட்ரோவ். ஆனால், அதன்பிறகு உஷாரான முர்ரே முதல் செட்டை டை-பிரேக்கருக்கு கொண்டு வந்தார். டை-பிரேக்கரில் தனது அபார சர்வ்கள் மூலம் 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதல் செட்டை 7-6 என்று வென்றார் முர்ரே. முதல் செட்டில் போராடிய முர்வே, 2வது செட்டை சரியாக கணித்து விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: