முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி சிறப்பாக செயல்பட செய்ய வேண்டியது என்ன? சோ

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன. 17 - தலைமை சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடந்தால்தான் அந்த கட்சி சிறப்பாக செயல்பட முடியும் என்று துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் ஆசிரியர் சோ பேசினார். துக்ளக் வார இதழின் 43 வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சோ பேசியதாவது, 

அ.தி.மு.க.வை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்துவது, மத்திய மின் பாதையில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவது, கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழு அளவில் தமிழகத்துக்கு தர மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை அ.தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. எனவே அ.தி.மு.க. இடம்பெறும் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து மத்தியில் அமோக பலம் பெறச் செய்ய வேண்டும். 

டெல்லி மாணவி மீதான பாலியல் வன்முறை கண்டனத்துக்குரியது. ஆனால் அதற்காக இந்திய இளைஞர்கள் அனைவரையும் அதே கண்ணோட்டத்துடன் சித்தரிக்க கூடாது. நடந்த சம்பவத்தை நாம் எளிதாக எடுத்து கொள்ள முடியாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதுதான் நியாயமானது. பாகிஸ்தானிடம் கெஞ்சக் கூடாது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது. 

மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால் பாகிஸ்தானிடம் இந்தியா கெஞ்சிக் கொண்டு இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சி பற்றி ஊழல் மலிந்த கட்சியாக உள்ளது. காங்கிரசின் ஊழல் ஆட்சிக்கு மாற்று பா.ஜ.க. ஆட்சிதான். பா.ஜ.க.வில் நேர்மையானவர்கள் அதிகம் பேர் உள்ளனர். மேலும் எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுக்க கூடியவர் நரேந்திர மோடி. பா.ஜ.க.வில் யஷ்வந்த்சின்ஹா உள்ளிட்ட பலர் பிரதமர் பதவிக்கு தாங்கள்தான் தகுதியானவர்கள் என்று பேசி வருகின்றனர். யாரை பிரதமராக அறிவிப்பது என்று பா.ஜ.க. இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நரேந்திர மோடிதான். 

தி.மு.க. வில் கருணாநிதி அதிகாரம் பெற்ற தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதா முழு அதிகாரம் பெற்றவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினரின் ஆதிக்கமே தொடர்கிறது. தெலுங்கு தேசம் கட்சியில் என்.டி. ராமாராவ் அதிகாரம் இருந்தவரை அந்த கட்சிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இப்படி தலைமை சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடந்தால்தான் அந்த கட்சி சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago