முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பிரவீன்குமார் பயிற்சி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை ஏப் 28 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது பற்றி கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல்  கமிஷனர்  பிரவீன் குமார் பயிற்சி அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரம் மூலம் நடந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மே மாதம் 13 ந் தேதி தமிநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.  

இதையொட்டி கோவையில் ஓட்டு எண்ணிகையில் ஈடுபடும் அனைவரும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் மண்டலம் வாரியாக வாக்கு எண்ணிக்கை மற்றும்  தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.

இதே போல் ,கோவை கொடீசியா வளாகத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கும்  மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட  கலெக்டர் உமாநாத், திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ்,நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

பயிற்சி வகுப்புகள் 2 கட்டமாக நடந்தது காலையில் நடந்த பயிற்சி யில் கோவை,திருப்பூர், ஈரோடு, மாவட்ட கலெக்டர்களும் மற்றும்  டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2 மணிக்குதொடங்கி 5 மணிக்கு முடிந்த பயிற்சி வகுப்பில் நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 ந்தேதி அன்று  ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்என்றும் வாக்கு எண்ணிக்கையை எவ்வித குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் இன்றி நடத்தப்பட வேண்டும், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஓப்புதல் பெற்ற பின்னர் தான் முடிவை அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எவ்வாறு எண்ணுவது என்றும் வாக்குஎண்ணிக்கை  மையங்களில்   வெளிப்புற பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது அவர்களை அமர வைப்பது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதல் பாதுகாப்பு ,செய்தியாளர்களுக்கு ,ஊடக அறை அமைத்து கொடுப்பது குறித்து 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு முகாமில்  எடுத்துரைத்தார்.

முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பெ. அமுதா ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு , வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி கேமிராக்களின் இயக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது .ஏதாவது குறைபாடுகள் இருக்குமாயின் தெரிவிக்கலாம் என்று பிரவீன்குமார் கேட்டார் அதற்குஎவ்வித குறைபாடுகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.

இதன் பின்னர்   தலைமை தேர்தல்  அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது

ஓட்டு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மண்டலம் வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ந் தேதி)கோவைமண்டலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நாளை (28ந்தேதி)  திருச்சியிலும் ,3ந் தேதி மதுரையிலும்,4ந்தேதி புதுக்கோட்டையிலும்.5 ந்தேதி சென்னையிலும் நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் உள்ள  வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். ஓரு  தொகுதிக்கு குறைந்த பட்சம் 14  மேஜைகள் போடப்படுகிறது. 

மேலும் 49 ஓ ஓட்டு போட்டவர்கள் குறித்து காவல் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. இது குறித்து டி.ஜி. பி. இடம் பேசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்

 இவ்  ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சண்முகசுந்தரம் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago