நாங்கள் அப்பாவிகள்: ஸ்பாட் பிக்சிங் வீரர்கள்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 18 - கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் போலீசிடம் சிக்கியிருக்கும் ஸ்ரீசாந்த் தாம் ஒரு அப்பாவி என்று நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதேபோல் போலீஸ் விசாரணையின் போது மற்றொரு வீரரான அங்கீத் சவானும் அழுதிருக்கிறார். 

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்தவர் ஸ்ரீசாந்த். தற்போது ஸ்பாட்பிக்சிங் விவகாரத்தில் ்ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஸ்பாட் பிக்சிங் தரகருக்காக வேலை பார்த்து ரூ.40 லட்சம் பணம் பெற்றுள்ளார். 

இதற்காக சூதாட்ட தரகர் கூறியப்படி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 2 வது ஓவரில் 13 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். ஸ்ரீசாந்த் உள்ளிட்ட ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கியோர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தாம் ஒரு அப்பாவி என்றும் தம்மை இந்த விவகாரத்தில் சிக்க வைத்து விட்டனர் என்றும் கதறினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், 

ஸ்ரீசாந்துக்கு எதிராக போலீசார் நேரடி ஆதாரம் எதுவும் தாக்கல் செய்ய வில்லை. அவர் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டனர் என்றார். மேலும், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களை 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப காவல்துறையினர் மனு செய்தனர். ஆனால், மூவருக்கும் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் போது அங்கீத் சவான் கதறி அழுதிருக்கிறார், தான் மோசமானவர்களின் பேச்சைக் கேட்டு ஏராளமான தவறுகளை செய்து விட்டதாகக் கூறி தமது குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: