ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதல்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே. 22 - ஐ.பி.எல். - 6 போட்டியில் டெல்லியில் இன்று நடக்க இருக்கும் பிளே ஆப் (எலிமினேட்டர்) சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி கள் கடந்த ஒன்றரை மாத காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இதில் முதலில் 72 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த லீக் ஆட்டம் 19 -ம் தேதியு டன் முடிவடைந்தது. இதன் முடிவில் 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. 

லீக் ஆட்டங்களின் இறுதியில் சென் னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் கூடுதல் புள்ளிகள் பெற்று முதல் 4 இட த்தைப் பிடித்தன. 

ஐ.பி.எல். போட்டியின் பிளே ஆப் சுற் று டெல்லியில் நேற்று துவங்கியது. குவாலிபயர் -1 ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெ றும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

3 - வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தா னும், 4-வது இடத்தைப் பிடித்த ஐதரா பாத்தும், டெல்லியில் இன்று நடக்கும் எலிமினேட்டரில் மோத உள்ளன. 

இதில் தோல்வி அடையும் அணி வெளி யேற்றப்படும், வெற்றி பெறும் அணி சென்னை- மும்பை மோதும் ஆட்டத்தி ல் தோற்கும் அணியுடன் (குவாலிபயர் -2)மோதும். 

இந்த ஆட்டம் 24-ம் தேதி கொல்கத்தா வில் நடைபெறும். குவாலிபயர் - 2 ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். இறுதிப் போட்டி 26-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இந்த சம்பவம் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாகும். இந்த சூழ்நிலையில் அந்த அணி குவாலிபயரில் மோதுகின்றது. ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். முத ல் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியாகும். 

அதே நேரம் சன் ரைசர்ஸ் அணி எந்த ஒரு பிரச்சினையும் இன்றி இந்தப் போ  ட்டியில் களம் இறங்குகின்றது. எனவே அந்த அணி வீரர்கள் புத்துணர்வுடன் ஆயத்தமாக உள்ளனர். 

கேப்டன ராகுல் டிராவிட்டுக்கு இந்த ஆட்டம் ஒரு சவாலான போட்டியாகு ம். இதில் அந்த அணி வீரர்களை ஒருங் கிணைத்து வெற்றிக்காக போராட வே ண்டிய கட்டத்தில் அவர் உள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது நெருக்கடியில் உள்ளது. சமீபத்திய பிரச் சினை அந்த அணி வீரர்கள் மத்தியில் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் அணி உணர்வு ஆகியவை பாதி க்கப்பட்டுள்ளது. 

எலிமினேட்டர் ஆட்டத்தில் பங்கேற்க இருக்கும் ராஜஸ்தான் அணி தனது வளைப் பயிற்சியை ஜெய்பூரில் வைத்து உள்ளது. அங்கிருந்து ஒரு மணி நேரத் தில் விமானம் மூலம் டெல்லி வந்து விடலாம். 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதரா பாத் அணிகளுக்கு இடையே இன்று நடக்க இருக்கும் ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனிமேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: