முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெய்யப்பனுக்கு அவகாசம் வழங்க மும்பை போலீஸ் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.25 - சென்னை சூப்பர் கிங்கின் தலைவர் குருநாத் போலீஸ் விசாரணக்கு ஆஜராகவில்லை என்றால், கைது வாரண்டை சந்திக்க கூடிய நிலையில் உள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் வின்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அடிக்கடி ஐ.பி.எல் சென்னை அணியின் தலைமை நிர்வாகி குருநாத் மெய்யப்பனிடம் மொபைல் போனில் பேசியது தெரிய வந்தது.

 இதையடுத்து, குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.  விசாரணைக்கு அவரை அழைக்கும் சம்மனை நேரில் அளிப்பதற்காக  சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்ற போது அங்கு அவர் இல்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரது வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. நேற்று  முன்தினம் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில் மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.பின்னர், மெய்யப்பன் சார்பில் அவரது மேனேஜர் சம்மனை பெற்றுக்கொண்டார். 

இதையடுத்து அவர்நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மும்பை போலீசார் முன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்தும் துணை கமிஷனர் ஒருவர் கூறும் போது மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று (நேற்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு மெய்யப்பனுக்கு  சம்மன் அளிக்கப்பட்டது. எனவே அவர் மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

தான் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என குருநாத் மெய்யப்பன் கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை மும்பை போலீசார் பரிசீலனை செய்வதாகவும்,  கால அவகாசம் தரமுடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டி இருக்கிறது. அப்படி ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் நிச்சியம் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த 2011ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரிமியர் லீக் தொடரிலும் பெட்டிங் கட்டியுள்ளதாகவும், அவர் ரூ. 10 லட்சத்திலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு போட்டிக்கும், ஒரு கோடி வரை பெட்டிங் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போதைய தொடரில், சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் குருநாத் பெட்டிங் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் . குருநாத் மெய்யப்பன், கடந்த ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடர் முதல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் ்டுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், வின்டூவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒவ்வொரு போட்டியிலும், ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரை பெட் கட்டியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும், மற்ற அணி பங்கேற்ற போட்டிகளிலும் குருநாத் பெட்டிங் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.ஐ.பி.எல். ஸ்பார்ட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான இந்தி நடிகர் விண்டூ தாராசிங் சென்னை சுப்ைபர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனுடன் 35 முறை போனில் பேசியதாகவும் போலீசார் தெரிவித்து இருந்தனர். 

இதையடுத்து குருநாத்தை சூதாட்ட வலைக்குள் மும்பை போலீசார் இழுத்துள்ளனர்  என்று தெரிகிறது. ஆனால் இந்த வலையில் சின்ன மீன்கள் தான் விழும் என்றும், சுறாக்கள் இதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

அதே நேரத்தில் சூதாட்ட விசாரணை பன்முகமாக இருப்பதால் சென்னையின் கோலிவுட், மும்பையின் பாலிவுட் திரை உலகினர் பீதியில் சூழ்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்