முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரி கட்சியின் தவறான ஆட்சிக்கு முடிவு கட்ட மம்தா போர்க்கொடி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா,பிப்.22  - மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் இடதுசாரி கட்சியின் 35 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பேசியதாவது, 

30 ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்தில் மக்கள் கிளர்ச்சியை நடத்தி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அதே போல் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 35 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளனர். இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை எதிர்த்தே நான் போராடி வருகிறேன். இடதுசாரி எண்ணம் கொண்ட மக்களை எதிர்த்து அல்ல. மேற்கு வங்க மாநிலம் உண்மையாகவே வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பினால் எங்களுடன் கூட்டு சேருங்கள். 

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ், எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி வைக்கவே நாங்கள் விரும்புகிறோம். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கிறோம். அதைப் போலவே மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்