முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-க்கும் மேற்பட்ட உட்செவிச்சுருள் பதியம் அறுவை சிகிச்சை

புதன்கிழமை, 12 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - கே.கே.ஆர் ஈஎம்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக முதல்வரின், முழுமையான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக 100-க்கும் மேற்பட்ட உட்செவிச்சுருள் பதியம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வரின் முழுமையான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்ட உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒலி மற்றும் பேச்சு பரிசு என்னும் அற்புதமான பரிசினை, அவர்களது அன்புக்குரிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுத்தந்துள்ளது. இந்த அற்புதமான பரிசு நிஜத்தில் அந்த இளம் குழந்தைகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அக்குழந்தைகள் அனைவரும் இத்தகைய புனர்ஜென்மத்திற்காகவும் மற்றும் வாழக்கிடைத்த இரண்டாம் வாய்ப்பிற்காகவும், அவர்களது நன்றிகளுக்கு தமிழக அரசு உரித்தானதாகத் திகழ்கிறது.

ஜனவரி 2013-ல் முதல்வரின் முழுமையான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்யப்படும் என தமிழ முதல்வர் அறிவித்தார். முதல்வரது முழுமையான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் அட்டையைக் கொண்டுள்ள மற்றும் ஏழ்மை நிலைக்கு கீழுள்ள, 6 வயதிற்கு உட்பட்ட கேட்கும் திறன் அற்ற குழந்தைகளுக்கு முழு நிதியுதவியுடன் உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், உட்செவிச்சுருள் பதிய  அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட முதல் மருத்துவமனை கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனையாகும். ஜூன் 2013 வரை, கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சைகளை இத்திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது. அனைத்து  அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன மற்றும் அவற்றின் முடிவுகள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.

முன்னணி உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை நிபுணரும் மற்றும் கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமானரவிராமலிங்கம் சிறப்பாக இந்தச் சிகிச்சைகளை செய்துள்ளார்.

 

கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பி) முதுநிலை ஆலோசகராகத் திகழும் பேராசிரியர்.ரவி ராமலிங்கம், ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இதுநாள் வரை, 400 அறுவை சிகிச்சைகளை இவர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (பி) மேற்கொள்ளப்படும் உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை முடிவுகள் மிக சிறப்பாக உள்ளது மற்றும் நாட்டின் முன்னணி உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை வழங்குனராக இந்த மருத்துவமனை திகழ்கிறது.

உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சையை கூர்நோக்கமாகக் கொண்டதொரு புதிய, நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, கே.கே.ஆர் ஈஎன்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜூன் 2013-ல் துவக்கவுள்ளது மற்றும் இப்புதிய மருத்துவமனை நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்கும் வகையில், உட்செவிச்சுருள் பிரச்சனைக்கான பிரத்தியேக துறைகளை கொண்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்