முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்த அவரது காதலர் புவனேஸ்வர் அங்கு வந்து கதறி துடித்தார்.

தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலியின் காதலன் புவனேஸ்வரை விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் காதலன் தூண்டுதலால் அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 306-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

அஞ்சலி திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சென்னை கொரட்டூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் அவரை அதே கட்டிடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நான் சந்தித்தேன். பின்னர் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.

இந்த நிலையில் எனக்கு ஊரில் பெண் பார்த்தார்கள். எனவே அஞ்சலி என்னை 2-வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நான் அதை ஏற்கவில்லை. எனக்கு திருமணம் நடந்தாலும் சென்னையில் நாம் ஒன்றாக இருப்போம் என்றேன். அதை அஞ்சலி ஏற்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony