முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் ராமதாஸ் கோர்டில் ஆஜராக உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,செப்.24 - முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு. முதல்வர் சார்பில் அரசு சிறப்பு குற்றவியல் வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த அவதூறு மனுவில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 28.4.2013, 30.4.2013, 14.5.2013 ஆகிய தேதிகளில்  மூன்று வெவ்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாரம் தன்னிடம் உள்ளது என்பதால் முதல்வர் செய்யும் செயலை மக்கள் அறிவார்கள் என்று அதில் கூறி உள்ளார். வேறுசில காட்டமான கருத்துக்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கைகள் அனைத்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் அவற்றில் கூறி உள்ளார். இதனால் முதல்- அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த மனு மீதும் நடவடிக்கை எடுத்து டாக்டர் ராமதாசை கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரும் 1.11.13 யன்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்