முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்தில் ஆஜராக தேவயானிக்கு விலக்கு

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க்,டிச.24 - விசா மோடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து இந்திய துணைத்தூதர் தேவயானிக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. 

தனது வேலைக்கார பெண்ணுக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக இந்திய துணைத்தூதர் தேவயாணி மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, அவரை கைவிலங்கு இட்டு நடுரோட்டில் அழைத்து சென்றது. இந்த சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆரம்பத்தில் இந்தி விவகாரத்தில் முரண்டு பிடித்த அமெரிக்கா, இந்தியாவின் எதிர்ப்பு வலுக்கவே இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டது. ஆனால் வழக்கை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து தேவயாணி மீதான நடவடிக்கைகளை தடுப்பதற்காக அவருக்கு ஐ.நா. அதிகாரி பதவியை மத்திய அரசு வழங்கியது. இதன் மூலம் அவர் மீதான நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த விஷயத்தில் இந்தியா_அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம். இருப்பினும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்கிறார் மத்திய இணை அமைச்சர். இதனிடையே இந்த விவகாரத்தில அமெரிக்கா சற்று பணிந்துள்ளது. இந்த விசா மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து தேவயாணிக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது தற்போது ஏற்பட்டுள்ள ஒரு திருப்பமாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்