முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை,டிச.28 - தமிழகத்தில் ஓரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த வேண்டும்  என்று   அனத்து கட்சிகளும் கோரியுள்ளன. மக்களவை தேர்தல் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறிய, அனைத்து கட்சி கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 31_ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 5 அல்லது 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் இறுதியில் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் எனவே பிப்ரவரி மாதம் 27,28 தேதிகளில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி புதிய வாக்காளர் சேர்ப்பு பணி முடிந்து வாக்காளர் பட்டியல் ஜனவரி 6_ந் தேதி வெளியிடப்படவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்  அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடந்தது.  இதில், துணை தேர்தல் கமிஷனர் சுதீர் திரிபாதி தலைமை தாங்கினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ்பாண்டியன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.சேதுராமன், டி.எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் என்.ஞானசேகரன், எஸ்.ரமணி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஏ.எஸ்.சக்திவடிவேல், சைதை ரவி, தே.மு.தி.க. சார்பில் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கல்யாண சுந்தரம், பா.ஜ.க. சார்பில் கே.டி.ராகவன், எஸ்.ஆதவன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ்.ரஜினிகாந்த், ஒய்.ஏ.நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், ஜனவரி 6_ந்தேதி வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப்பட்டியல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த  கூட்டத்தில், தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை  தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மேலும்,  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

அதைத்தொடர்ந்து பிற்பகலில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருடனும் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரவீன்குமார் கலந்துரையாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்