முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர கட்டணத்தை ஆலைன் மூலம் செலுத்த உத்தரவு

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.3 - மாதாந்திர கட்டணத்தை ஆலைன் மூலம் செலுத்த வேண்டும் என்று ஆப்பரேட்டர்களுக்கு அரசு கேபிள் டி.வி. அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. சேவையினை மாதம் ரூ.70/_ என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வழங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. சேவையை அளித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்கனவே 17.11.2011 அன்று வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரத்தின்படி மாதாந்திர கட்டணத்தொகை (ரூ.5000/_) மேல் செலுத்த வேண்டிய உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் (எல்.சி.ஓ.) பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்கள் (எம்.எஸ்.ஓ.) மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.) 01.01.2014 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் (சடீசி ஆஹடூகூடுடூகி) முறையில் சூசூசூ.சிஹஷசிசு.டுடூ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

மேலும் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் (எல்.சி.ஓ.) பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்கள் (எம்.எஸ்.ஓ.) மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.) 01.03.2014 முதல் சலான் மூலம் மாதாந்திரக் கட்டணம் செலுத்தும் வசதி இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே அனைத்து உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் (எல்.சி.ஓ.) பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்கள் (எம்.எஸ்.ஓ.) மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பி.எல்.சி.) தங்களுடைய வங்கிகளை அணுகி ஆன்லைன் (சடீசி ஆஹடூகூடுடூகி) வசதியினை பெற்று 01.03.2014 முதல் ஆன்லைன் (சடீசி ஆஹடூகூடுடூகி)  முறையில் மட்டுமே மாதாந்திர கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்