முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிட்டாப்பட்டி மலையை உடைப்பதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்- விஷ்வ இந்து பரிஷத்

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 26 - மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மலையை உடைப்பதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.   மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அரிட்டாப்பட்டி. இந்த பகுதியில் ராமாயிமலை, ஆப்டாமலை, களிஞ்சான் மலை என 7 மலைகள் உள்ளது. இந்த மலைகளில் பஞ்சபாண்டவர் கோவில், குடவறை கோவில், சிவன்கோவில் மற்றும் புத்தர் சிலைகள் உள்ளன. இந்த மலையை தொல் ஆராய்ச்சி துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அரசின் டாமின் நிறுவனம் மலையை தனியார் குவாரிக்கு டெண்டர்விட்டது. டெண்டர் எடுத்தவர்கள் மலையை உடைக்க வெடிவைத்தபோதுதான் மலை ஏலம் விடப்பட்ட விவரம் கிராம மக்களுக்கு தரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரிட்டாப்பட்டி மலையை விஸ்வ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் மற்றும் திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு அமைப்பின் மாநில இணைஅமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், அரிட்டாப்பட்டி சிவன் கோவில் பூசாரி முத்துக்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, இந்த மலையை உடைத்தால் 10 முதல் 20 கிராமங்களில் நீர்வள ஆதாரம், விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும்.
   மலை உடைத்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவே உடனே மலையை உடைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இங்குள்ள கல்லால் ஆன தேர் சிலைகள் பழமையை எடுத்துரைக்கிறது. குஜராத், நேபாளம் போன்ற இடங்களிலும்  இது போன்ற சிலைகள் தான் உள்ளது. எனவே மலை உடைப்பை தடுத்து நிறுத்தவிட்டால் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி மிகபெரிய போராட்டத்தை விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் என்றன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்