முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை?

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 19 - கிரீமியா விவகாரம் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

உக்ரைனில் இருந்து கிரீமியா பிராந்தியத்தைப் பிரித்து ரஷியாவுடன் இணைக்க நடந்த வாக்கெடுப்பில் 97 சதவீத ஆதரவு கிடைத்தது. இதையடுத்து கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கு கடும் எதிற்ப்பு தெரிவித்த அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும் திட்டமிட்டனர். 

இதைத் தொடர்ந்து ரஷியா அதிபரின் உதவியாளர்கள் 2 பேர் உள்பட்ட அந்நாட்டு உயர் அதிகரிகள் 7 பேருக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஒபாமா பொருளாதாரத் தடை விதித்துள்ளார். இந்த அதிகாரிகள் மற்றும் இன்றி இவர்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட சொத்துகளும் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேலும் உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் உள்ளிட்ட 4 உக்ரைன் நாட்டவர்கள், கிரீமியாவைச் சேர்ந்த 2 பிரிவினைவாத தலவர்கள் ஆகியோர் மீதும் அமெரிக்க கருவூலத்துறை பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷிய அதிகாரிகள் 13 பேர், உக்ரைன் அதிகாரிகள் 8 பேர் என மோத்தம் 21 பேரின் சொத்துகளை முடக்கியதுடன் தங்கள் நாடுகளுக்கு அவர்கள் பயணம் செய்யவும் தடை விதித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்