முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க தயார் - அப்ரிடி

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, ஜூன். 3 - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக் க தயார் என்று முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான சாகித் அப் ரிடி தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எழுந்த மோதல் காரணமாக அப்ரிடி ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

அதோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான குற்றச் சாட்டுகளை தெரிவித்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ம் அதிர்ச்சி அடைந்து அவர் மீது நடவடிக்கை எடுத்தது. அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. 

தவிர, அப்ரிடிக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் ரத்து செய்ய ப்பட்டது. வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும், இதற் கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு அப்ரிடிக்கு பாக். கிரிக். வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக் கையை சந்திக்க தயார் என்று முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது -  

வீரர்களின் ஒப்பந்த விதிமுறைகளை நான் மீறிவிட்டதை ஏற்றுக் கொ  ண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எனது பதிலை அனுப்பி விட்டேன். ஆனால் இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். 

இதற்காக எந்த விளக்கத்தையும் என்னால் அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். அப்ரிடி மீது நடவடிக்கை எடுத்தால் ரூ. 5 லட்சம் அப ராதம், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம்  என்று கூறப்படுகிறது.  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவில் சுற்று ப் பயணம் செய்து கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடியது. 

பாகிஸ்தான் அணி தற்போது அயர்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த பயணத்திற்கு மூத்த வீரரான மிஸ்பா உல் ஹக் கேப் டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இதற்கு இடையே கேப்டன் பதவி தொடர்பாக பாக். கிரிக்கெட் வாரி யத்திற்கும், அப்ரிடிக்கும் மோதல் ஏற்பட்டாதால் அவர் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியை துறந்தார். பின்பு கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்