முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் பண்ருட்டி ராமசந்திரன் பேச்சு

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 8 - மேலவை மீண்டும் வராமல் இருக்க வேண்டுமானால் மேலவை திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறவர்கள் வராமல் இருப்பதில் நாம் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமசந்திரன் பேசினார். சட்டமேலவை நீக்க தனி தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமசந்திரன் பேசியதாவது:- மேலவை நீக்கப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் முடிவு எடுத்தபொழுது அவரோடு இருந்து டில்லி வரை சென்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து அவர்களிடமும் பேசி, அதற்கு பிறகு மேலவையை அன்று ஒழித்த பெருமையிலே எனக்கு ஒரு சிறப்பு பிறகு மேலவையை அன்று ஒழித்த பெருமையிலே எனக்கு ஒரு சிறப்பு பங்கு உண்டு, திரும்ப திரும்ப இந்த மேலவை மறுபடியும் வந்து கொண்டே இருக்கிறது. இதை உறுதியாக தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதையே நம்முடைய முதல்வர் ஜெயலலிதா செய்வதை காணுகிறபொழுது, அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இதயமார நன்றி தெரிவிக்கிறேன்.
மேலவை திரும்ப வராமல் இருக்க வேண்டுமானால், மேலவை திரும்ப வரவேண்டும் என்று நினைக்கின்றவர்கள், வராமல் இருப்பதிலேதான் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது. அதற்கு சட்டம் தேவை இல்லை. நாட்டு மக்கள் நம்மோடு இருக்கின்றார்கள். அவர்களுடைய நல்லுணர்வோடு நல்லாட்சியை தந்து கொண்டேயிருக்கின்ற நாம் நிச்சயமாக மீண்டும் மேலவை வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஆட்சிக்கட்சியில் அமர்வதற்கு வாய்ப்பே இனி வருங்காலத்தில் இல்லை என்பதை உருவாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
பல மாநிலங்கள் சேர்ந்து, பல தேசிய இனங்கள் சேர்ந்து கூட்டாட்சி அமைப்பு இருக்குமேயானால் இப்பொழுது இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்தியாவிலே ராஜ்யசபா தேவை, ஆனால் ஒரே மொழி பேசுகிற, ஒரே நிலப்பகுதியிலே வாழ்கின்ற மக்களாகிய நாம் அனைவரும் நம்முடைய பிரதிநிதிகளாக இங்கே சட்டமன்றத்திலே உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறபோது, மேலவை என்கின்ற ஒன்று தேவையில்லை. பிள்ளைகளால் கைவிடப்பெற்ற பொற்றோர்களுக்கு, முதியோர் இல்லம் தேவை என்று கருதுகிற இக்காலத்தில் அவர்களுக்கும் ஒரு முதியோர் இல்லம் தேவை என்று கருதினார்களா என்னவோ சட்டமன்ற மேலவை வேண்டும் என்ற ஒரு நிலையை கொண்டு வந்தார்கள்.
நம்மை பொறுத்தவரையிலே அத்தகைய முதியோர்களுக்கு, இத்தகைய  இல்லம் தேவையில்லை, நிச்சயமாக மக்களுடைய வரி பணத்திலே அவை தேவையில்லை. முதல்வர் டெல்லி செல்கிறபொழுது மத்திய அரசிடம் பேசி மேலவையை  நீக்க ஏற்பாடுகளை நிச்சயம் செய்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்