முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் தங்கதமிழ்செல்வன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,ஜீலை.- 5 - ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனை தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ பார்வையிட்டு திருப்பணி குழுவினரிடம் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடைவீதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.கோவிலின் கல்காரம் முதல் ராஜகோபுரம் வரை புதியதாக 7 நிலைகளில் கட்டப்பட்டு உள்ளது.மேலும் உள் கோபுரங்களில் சேதமான இடங்களில் பணிகள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம்பூசும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.மேலும் மூலவர் சந்நிதி,மீனாட்சியம்மன் சன்னதி,விநாயகர்,பாலமுருகன்,தட்சிணாமூர்த்தி,நடராசர்,பள்ளியறை,பிரம்மா,துர்க்கையம்மன் ,சண்டிகேஷ்வரர்,63 நாயன்மார்கள்,நவக்கிரகங்களும் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.தரைத்தளத்தை கிரானைட் தளமாக மாற்றும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் 75 சிவாச்சாரியார்கள் 35 குண்டங்கள் அமைத்து ,வேதபாராயணம் செய்து,யாக சாலை பூஜைகள் செய்து,கும்பாபிஷேகமும்,மகா அபிஷேகமும் நடத்த உள்ளனர்.இந்த பணியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.மேலும் கோவிலின் எதிர்புறமுள்ள பயனற்று கிடக்கும் தெப்பத்தை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திருப்பணிக்குழுவினரிடம் உறுதியளித்தார்.அப்போது திருப்பணிக்குழுவை சேர்ந்த வச்சிரவேல் ஏ.வி.தண்டாயுதபாணி,சிவாஜி,எம்.எம்.முத்துவெங்கட்ராமன் ,அமரேசன்,மாரிச்சாமி,ஈஸ்வரிமுருகன்,சந்திரசேகரன்,மீனாட்சிசுந்தரம்,ரமணி கணபதி,முனிராஜ்,ராமநாதன்,மகாலிங்கம்,ஆகியோர்களும் ,அதிமுக ஒன்றிய செயலாளர் பால்பாண்டியன்,மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வரதராஜன்,எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜி.கே.பாண்டியன்,ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் செந்தில்பரமசிவம்,ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன்,பாலமுருகன்,முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்