முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 11-ம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 9 - கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி அணையிலிருந்து மாவட்டத்தின் முதல் போக சாகுபடிக்கு 11-ம் தேதியிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் குருவை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் தண்ணீர் திறந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். இதன் மூலம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.    

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்கோளினை ஏற்று,  11.7.11 முதல் கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, முதல் போக புன்செய் பாசனத்திற்காக 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்