முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் டி.ராஜேந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து டி.ராஜேந்தர் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியது. இதை கண்டித்து லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது. இதையொட்டி சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை முன்பு கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் பேசுகையில், மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியுள்ளது. மக்கள் மீது சுமையை வைக்கிறார்கள். பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் நம் நாட்டின் பெட்ரோல் விலையை காட்டிலும் குறைவு. நம் நாட்டில் எண்ணை வளம் உள்ளது. இலங்கையில் எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் விற்பது ரூ.50-க்கு தான்.

எரிவாயு விலையை உயர்த்திய போதும், தமிழக முதல்வர் வரியை ரத்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சரி பெண்கள் அவதிப்பட கூடாது என்று குறைத்து இருக்கிறார்கள்.

பல கட்சிகள் இன்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசு விலையை உயர்த்தினால் மக்கள் தாங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை மாவட்ட லட்சிய தி.மு.க. செயலாளர் மதன், வடசென்னை மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ் சுரேஷ், எஸ்.பி.முரசு, சிலம்பகம் ஏ.முரளி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து லட்சிய தி.மு.க.வினர் கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்