முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமுல் காங்.,கின் திரிவேதி ரயில்வேதுறை அமைச்சர்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 13 - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மத்திய ரயில்வே துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை அமைத்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி மத்திய ரயில்வேத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பிறகு கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து மம்தா பேனர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார். இதனால் இவர் தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவுக்கு பிறகு ரயில்வேயை பிரதமர் மன்மோகன்சிங் தன்வசமே வைத்துக்கொண்டார். 

இப்போது அந்த ரயில்வேதுறை இலாகா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தினேஷ் திரிவேதி ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் ரயில்வே துறையை திரிணாமுல் காங்கிரஸ்  மம்தா பேனர்ஜி கூறியதைப் போலவே தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!