எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,ஜூலை.17 - ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். மேலும் ஓய்வு நாளை புத்தகம் எழுத செலவிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 2012 ல் முடிவடைகிறது. அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தான் மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடப் போவதில்லை என பி.பி.சி. தொலைக்காட்சிக்கு ஹிலாரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க நான் விரும்பவில்லை. எனது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட ஆர்வமாக உள்ளேன். இதனால்தான் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எனது வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். மகளிர் மேம்பாட்டுக்காக என்னால் ஆனவற்றை செய்ய நினைத்தேன். கூடுமானவரை தேவையானவற்றை செய்துள்ளேன்.
மனித உரிமை, சுய கவுரவம், சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அமெரிக்காவின் தலைமை இந்த உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அமெரிக்காவின் முக்கியத்துவத்தையும் தலைமையின் அவசியத்தையும் நிலைநிறுத்துவதே எனது முக்கிய பணியாக கருதுகிறேன். மக்கள் பணியாற்றுவதில் நான் எப்போதும் களைப்படைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது நீண்ட ஓய்வெடுக்க நேர்ந்தால் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வது வழக்கம். எனவே எனது வேலையில் நான் ஒருபோதும் களைப்படைந்ததில்லை என்றார் ஹிலாரி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


