முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி நகைகள் கோவிலுக்கே சொந்தம் : பா.ஜ.க. கருத்து

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை. -18-  பத்மநாபசுவாமி ஆலய நிலவறையில் எடுக்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம். இது குறித்து விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. தேசிய செயலர் முரளீதர் கூறியதாவது, 

கோவிலில் உள்ள நகைகள் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டதோ அல்லது படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்டதோ அல்ல. அவை அனைத்துமே கடவுளுக்காக பக்தர்களால் அளிக்கப்பட்டவை. நூறாண்டு பழமை வாய்ந்த ஆலயத்தையும், அதன் புராதனத்தையும் காப்பாற்றி வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பணி பாராட்டுக்குரியது. கோவிலை மட்டுமின்றி சொத்துக்களையும் அரச குடும்பத்தினர் காப்பாற்றியுள்ளனர்.  கோவில் சொத்துக்களை வேறு யாரும் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் தங்க சுரங்கங்கள் இல்லாத நிலையில் நமது மூதாதையர்கள் தங்களுக்குள்ள சர்வதேச தொடர்புகள் மூலம் தங்கத்தை பெற்று அவைகளை நகைகளாக வடித்துள்ளனர். இந்தியாவில் வளத்திற்கும், சொத்துக்களுக்கும் ஒருபோதும் குறைவில்லை. இந்தியா வளமான நாடுதான். ஏழை நாடல்ல. ஊழல் அரசியல்வாதிகளும் நிர்வாக நடைமுறைகளும் அது சார்ந்த கொள்கை வகுப்பதிலும்தான் இங்கு பிரச்சினையே ஏற்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்