முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம் அன்னா ஹசாரே அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.- 30 - பிரதமரையும் நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வராத லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததுள்ளதன் மூலம் மத்திய அரசு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். லோக்பால் மசோதா தொடர்பான அமைச்சரவை கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் லோக்பால் வரைவு மசோதா குறித்தும், மக்கள் பிரதிநிதிகள் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஊழல் செய்யும் பட்சத்தில் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க வகை செய்யும் விதமாக அவர்களையும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் பிரதமர் மற்றும் நீதித்துறையினரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வராத வகையிலான வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரைவை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதன் மூலம் மத்திய அரசு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 16 ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவின் தற்போதைய வரைவு மிகவும் பலவீனமானதாகவும், பயனற்றதாகவும் உள்ளது. வலுவான லோக்பால் மசோதா இல்லாமல் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தேசத்தின் மீதான மிகப் பெரிய மோசடி இது என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், ஹசாரே குழுவை சேர்ந்தவருமான கிரண்பேடி கூறியுள்ளார்.  ஒரு அற்புதமான வாய்ப்பை அரசு தவற விட்டு விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்