முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 மனுக்கள்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.10 - அயோத்தி பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டில் மேலும் 2 மனுதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரதான வழக்கில் உள்ள மனுதாரர்கள் சன்னி மத்திய வக்பு வாரியம், அகில பாரத இந்து மகாசபா, சமாயுத் உலமா இஹிந்த், நிர்மோகி அகாரா மற்றும் ஸ்ரீராமர் ஆகியோர். இப்போது அகில பாரதீய ஸ்ரீராம் ஜன்மபூமி சமீதி என்ற அமைப்பும், பரூக் அகமது என்பவரும் தங்களை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு செய்திருந்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டு இவர்களுடைய மனுவை பிரதான வழக்கில் இணைக்குமாறு உத்தரவிட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 சம பங்குகளாக பிரித்து மனுதாரர்கள் மூவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து இவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த தீர்ப்பு கடந்த ஆண்டு 30 ம் தேதி அளிக்கப்பட்டது. அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை நடப்பு ஆண்டு மே 9 ம் தேதி வரை நிறுத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்