முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: ரவிசங்கர்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.19 - சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குற்றம் சாட்டினார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹசாரேவை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் கூட்டத்தினர் மத்தியில் பேசும் போது, தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியளிக்கும் வரை சிறையிலேயே தனது போராட்டம் தொடரும் என்று ஹசாரே என்னிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு பிடிவாதமாக உள்ளது. அவரை கைது செய்த விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்