முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன் லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றவேண்டும்-சாந்திபூஷன் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 21 - ஜன் லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிவில் குழுவில் உள்ள பிரபல வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான சாந்திபூஷன், மத்திய அரசை வலியுறுத்து கேட்டுக்கொண்டுள்ளார். லோக்பால் மசோதாவுக்கான வரைவு மசோதாவை சிவில் உறுப்பினர்கள் தனியாகவும் அரசு தரப்பு பிரதிநிதிகள் தனியாகவும் தயாரித்து உள்ளனர். இதில் அரசு தரப்பில் தயார் செய்யப்பட்ட வரைவு மசோதா மட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர், நீதிபதிகள் உள்ளடக்கப்படவில்லை. சிவில் குழுவில் உள்ள உறுப்பினர்கள் தயாரித்துள்ள சன் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சாந்தி பூஷன் நேற்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நாங்கள் தயாரித்துள்ள சன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு நினைத்தால் நாங்கள் தயாரித்துள்ள மசோதாவை ஓரிரு நாட்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிடலாம். சன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்பட்டாலும் அதை நிறைவேற்றுவோம் என்று அண்ணாஹசாரேயிம் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் சாந்தி பூஷன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்