முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி பாதிப்பு புகார் எதிரொலி ஜப்பான் பிரதமர் ராஜினாமா

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

டோக்கியோ, - ஆக. 29  - சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் அடுத்து ஜப்பான் பிரதமர் நவோடா கான் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். ஜப்பானில் ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் சார்பி ல், இதுவரை 4 பேர் பிரதமராக இருந்துள்ளனர். அவர்களால் ஓராண்டு அல்லது அதற்கு குறைவாகவே பதவியில் நீடிக்க முடிந்தது. பல்வேறு பிரச்சினைகளால் பிரதமர்கள் மாற்றப்பட்டனர். ஐந்தாவது பிரதமராக நவோடா கான் பதவியேற்றார். ஆனால் இவராலும் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. இவருக்கும் சுனாமி வடிவில் பிரச்சி னை வந்தது. ஜப்பானில் அடிக்கடி பூகம்பம், சுனாமி தாக்குதல் ஏற்பட்டாலும் கடந்த மார்ச் மாதம் புருஷிமா பகுதியில் ஏற்பட்ட பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யது. அணுஉலைகள் சேதமடைந்து கதிர்வீச்சும் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலையை பிரதமர் நவோடா சரிவர கையாளவில்லை , மீட்புப்  பணிகள், நிவாரண பணிகள் தாமதமாகின என்ற குற்றச்சாட்டு எழுந் தது.
அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மா   னத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தது. இதையடுத்து பதவி விலகுவ தாக கடந்த ஜூன் மாதமே அவர் அறிவித்தார். அதன் பின், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பிரதமர் பதவியை நவோடா நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில், நெருக்கடியான நிலையில், என்னால் முடிந்த வரை நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.
இதையடுத்து வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செஜி மெகரா (49), அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிய வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago