முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்பிற்குள் பிரதமர் - பீகார் முதல்வர் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

பாட்னா, செப்.6 - லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவருவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிதீஷ்குமார், லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். பீகாரில் மாநில முதல்வரையும் மாநில லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். லோக்பால் மசோதாவினால் மட்டுமே நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஆனால் இந்த மசோதா கொண்டுவரப் படுவதால் லஞ்சம் வாங்குவோருக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் பயம் ஏற்படும் என்றார்.
ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவுக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்தது குறித்து பேசிய நிதீஷ், ஊழலை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதையே இது காட்டுகிறது. எனவே வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவருவதே மத்திய அரசின் தலையாய கடமையாகும். பீகாரில் லஞ்சத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பெறவேண்டிய பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலமே பல சான்றிதழ்களை பெறும் வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பணிகள் நேர்மையாகவும், நேர விரயமும் தவிர்க்கப்படும் என்றும் நிதீஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்