முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைப்பகுதிகளில் மின்அடுப்பு வழங்கப்படும் - முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை செப் - 19 - மலைப்பகுதிகளில் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு மிக்ஸி, கிரைண்டருடன் மின்விசிறிக்கு பதிலாக மின் அடுப்பு (இண்டக்ஷன் ஸ்டவ்) வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

எனது தலைமையிலான அரசு, ஏழை, எளியவர்களுக்கான அரசு;  சராசரி மனிதர்களுக்கான அரசு; சாமானிய மக்களுக்கான அரசு என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  எனவே தான், ஏழை, எளியோர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு எனது தலைமையிலான அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.  மேலும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் எனில் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்கள் நல அரசின் கடமை ஆகும்.இதனைக் கருத்தில் கொண்டு, சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட பல்வேறு நலத்  திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான், நாளும் சமையல் அறையில் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப் பளுவைக் குறைக்கும் வகையிலும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இல்லத்தரசிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் மகத்தான திட்டத்தை நான் உருவாக்கினேன்.  இந்தத் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15.9.2011 அன்று தொடங்கி வைத்தேன். நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், அந்தப் பகுதிகளில் நிலவும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை காரணமாக மின் விசிறியைப் பயன்படுத்த இயலாது என்றும், அதற்குப் பதிலாக விரைந்து.  உணவு சமைத்திடும் வகையில் மின் அடுப்பு, அதாவது, இண்டக்ஷன் ஸ்டவ்)  வழங்கினால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். எனது தலைமையிலான அரசு, திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.  எனவே, மலைப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மலைப்பகுதிகளில் உள்ள இல்லத்தரசிகளுக்குப் பெரிதும் பயன் அளிக்கும் வகையில்,  அவர்களுக்கு மிக்ஸி மற்றும் கிரைண்டருடன், மின் அடுப்பை (இண்டக்ஷன் ஸ்டவ்) வழங்க நான் முடிவு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்