முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க மாஜி மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. மனு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.24 - பா.ஜ.க. தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி மற்றும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் அக்கட்சி சார்பில் நேற்று புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலக செயலாளர் வடிவேலு, பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெயசங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று மதியம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 23.9.2007 அன்று சென்னை தி.நகரில் உள்ள எங்கள் கட்சி அலுவலகம் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டது. அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்ட வன்முறையை தூண்டும் அறிக்கையை தொடர்ந்து அப்போதைய அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் தி.மு.க.வினர் அலுவலகத்தை தாக்கினர். தாக்குதல் நடத்துவதற்காக அலுவலகம் அருகே வரை அரசு பேருந்துகளில் தி.மு.க.வினரை அழைத்து வந்தனர். அலுவலகத்திற்குள் புகுந்து ஜன்னல், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை நொறுக்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இந்த சம்பவத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் காயம் அடைந்தனர். 

இது தொடர்பாக போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றம் புரிந்த அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்