முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா விவகாரம் இந்தியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 30 - அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதாவை சர்வதேச தரத்திற்கு உறுதி செய்யும்படி இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த நஷ்ட ஈடு எவ்வளவு என்பதில் அமெரிக்கா உள்பட அணுசக்தி நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதாவை உறுதி சர்வதேச நாடுகளுக்கு உறுதி செய்யும்படி அமுல்படுத்த எஸ்.எம்.கிருஷ்ணாவை ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக உயரதிகாரி விக்டோரியா நியூலாந்து நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த விக்டோரியா, இந்த ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இது தொடர்பாக இந்தியா தரப்பில் பல முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது என்றார். இருநாடுகளிடையே உறவு நல்லமுறையில் இல்லை என்று கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு அதை விக்டோரியா மறுத்தார். நியூயார்க் நகரில் கிளிண்டனும் கிருஷ்ணாவும் சந்தித்து பேசிய விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாடுகளிடையேயும் பிராந்திய அளவிலும் உலக அளவிலும் உறவு பலமாக உள்ளது. பல்வேறு விஷயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவோம் என்றும் விக்டோரியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்