முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் அமைச்சருடன் கமல்நாத் சந்திப்பு

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

துபாய், அக்.- 12 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் வெளிவர்த்தகத்துறை அமைச்சருடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத் துபாயில் ஆலோசனை நடத்தினார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். துபாயில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டின் வெளிவர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல்ஹாஸிமியை சந்தித்து இருநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆலோசனையை நடத்தினார். இந்தியாவிலும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டிலும் பரஸ்பர வர்த்தக வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். முதலீடு வாய்ப்புகள், கூட்டு முதலீடுகள் வர்த்தக கூட்டு முயற்சிகள் போன்ற அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டங்களை நடத்துவதற்கான  சாத்தியக் கூறுகள் குறித்தும் இவ்விரு அமைச்சர்களும் விவாதித்தனர்.  இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு விரும்புவதாக அந்நாட்டு அமைச்சர் அல் ஹாசிமி தெரிவித்தார்.  உலக பொருளாதாரத்தில் ஒரு புதிய ஒழுங்குமுறை தோன்றி வருகிறது என்றும், அதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் அமையும் என்றும் கமல்நாத் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்