முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் கவர்னர்கள் மாநாடு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.19 - டெல்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இதை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் துவக்கி வைக்கிறார். இதில் பிரதமர் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கவர்னர்கள் மாநாட்டின் போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பது வழக்கம். ஜனாதிபதி மாளிகையில் வரும் 29ம் தேதி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு உரையைற்றுவார்கள். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு 31 ம் தேதியன்று நிறைவடைகிறது. இம்மாநாட்டின் அமைப்பாளராக ஆந்திர கவர்னர் நரசிம்மனை ஜனாதிபதி நியமித்துள்ளார். கவர்னர்களிலேயே இளையவர் நரசிம்மன் தான். மற்ற கவர்னர்களின் வயது 75க்கும் அதிகமானதாகும். 5 ஆண்டுகளுக்குள் 2 மாநிலங்களிலேயாவது பணியாற்றியிருக்க வேண்டியிருக்கும். இந்த அடிப்படையில் தான் கவர்னர் அமைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது வழக்கம். ஆனால் நரசிம்மனை விட வயதானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் 2 மாநிலங்கலில் பணியாற்றவில்லை என்பதால் நரசிம்மனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதம், நக்சலைட் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நிலச்சீர்திருத்தம், பெண்களுக்கு அதிகாரம், அணு பாதுகாப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். நீதித்துறை குறித்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஜித் சிறப்பு அறிக்கையை இம்மாநாட்டில் சமர்பிக்கிறார். இதுகுறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்