முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு. கூட்டணிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: அத்வானி

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

நாக்பூர்,அக்.19 - நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் படுதோல்வி ஏற்பட்டிருப்பது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டதை காட்டுகிறது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளார். நாட்டில் ஊழலை எதிர்த்தும் தூய்மையான நிர்வாகத்தை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 11-ம் தேதியில் இருந்து ரத யாத்திரையை பீகார் மாநிலத்தில் இருந்து தொடங்கியுள்ளார். அவரது யாத்திரை நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூருக்கு வந்தது. நாக்பூரில் எல்.கே.அத்வானிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வியானது அந்த அரசுக்கு முடிவுகாலம் தொடங்கிவிட்டதை காட்டுகிறது என்றார். ரத யாத்திரையை நான் கடந்த 11-ம் தேதி தொடங்கினேன். அதன் பின்னர் லோக்சபை தொகுதிக்கும் பல மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இது அந்த அரசுக்கு தேர்தல் எச்சரிக்கையாகும். அதோடுமட்டுமல்லாது மத்தியில் அந்த அரசின் ஆட்சிக்கு முடிவுகாலம் தொடங்கிவிட்டது என்பதை காட்டுகிறது என்றார். காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, ஆந்திரா,அரியானா ஆகிய மாநிலங்களிலேயே அந்த கட்சுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது மக்களுக்கு எதிரான கொள்கையை

கடைப்பிடித்து வருவதாலும் ஊழலில் சாதனை புரிந்து வருவதாலும் இந்த அரசு நீடிக்க மக்கள் விரும்பவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழலானது எல்லையை கடந்த போய்விட்டது. இதனால் மக்கள் பெரும் வெறுப்புக்குள்ளாகி உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தமாதிரியான ஊழல் அரசு மத்தியில் அமைந்தது இல்லை. இந்த அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தேர்தல் தோல்வியை பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எல்.கே. அத்வானி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!