முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னிதாலா கடிதம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ. 30 - முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுவதற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவவர் ரமேஷ் சென்னிதாலா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, 116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையை சுற்றி வசிக்கும் 30 லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட வேண்டியதுள்ளது. கேரள அரசின் இந்த கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும். கேரளம் புதிய அணையை கட்டினால் தமிழகத்தின் பாசனத்துக்கு போதிய தண்ணீர் தராது என்று தமிழகம் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

இதைப் போல முல்லைப் பெரியாறு புதிய அணை கட்ட ஆதரவு கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் பரதன், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்