முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சண்டிகார்,டிச.- 25 - பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆளும் சிரோன்மணி அகாலிதளம் (பாதல்) கட்சி சார்பாக 48 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லம்பி சட்டமன்ற தொகுதியில் முதல்வரும் கட்சியின் நிறுவனருமான பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடுகிறார். பஞ்சாப், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோன்மணி அகாலிதளம் சார்பாக நேற்றுமுன்தினம் முதல் வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்பட்டது. இதில் லம்பி தொகுதியில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாதலின் தம்பி குருதாஸ் பாதல் போட்டியிடுகிறார். இவரை பஞ்சாப் மக்கள் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த கட்சியையும் பாதலின் ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் நிதி அமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆக லம்பி தொகுதியில் முதல்வர் பாதல் அவரது தம்பி குருதாஸ் பாதல் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்