முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்த பிரதமருக்கு ஆளுநர், ஜெயலலிதா வரவேற்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 26 - தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ரோசைய்யா,  முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரமுகர்கள்  மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் கபில்சிபல்,  நாராயணசாமி ஆகியோர் வந்தனர்.  விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு பிரதமர் புறப்பட்டுச்சென்றார். அங்கு நேற்று இரவு தங்கினார். இன்று (திங்கட்கிழமை) காலை 9.40 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு 10 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்படத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் கணிதமேதை ராமானுஜத்தின் 125​வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.  இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர், தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி சென்று, அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் கணிதமேதை ராமானுஜர் மையத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி வந்து, மீண்டும் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.    பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், கவர்னர் மாளிகை, சென்னைப்பல்கலைக் கழகம் ஆகிய இடங்களிலும், பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதுபோல திருச்சி, காரைக்குடியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

கவர்னர் மாளிகையில் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணை கமிஷனர் சேசசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோரது மேற்பார்வையில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.  இதுதவிர விமான நிலையம் மற்றும் மன்மோகன்சிங் காரில் வரும் வழித்தடங்கள் ஆகியவற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திருச்சி மற்றும் காரைக்குடியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்