முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் தொகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுது: ஆர்.பி.உதயகுமார் உடனடி நடவடிக்கை

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சாத்தூர்,டிச.- 26 - சாத்தூர் தொகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ விரைந்து வந்து உடனடி நடவடிக்கை எடுத்தார்.   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி சிவலிங்கா புரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென பழுதாகி மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள சிறு தொழில் அதிபர்களும் பாதிக்கப்பட்டனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் சிரமப்பட்டனர். இந்த தகவல் முன்னாள் அமைச்சரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு டிராஸ்பார்மரை சரிசெய்து மின்சாரம் வழங்கும் படிகேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பழுது செய்யும் பணியை பார்வையிட்டார். அப்போது விரைவாக வேலை பார்த்து பழுதை சரிசெய்த மின்வாரிய ஊழியர்களை ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பாராட்டினார். பொதுமக்களின் சிரமத்தை கேள்விப்பட்டு ஓடிவந்து உதவி செய்த ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏவை கிராமமக்கள் பாராட்டினர்.
   ஆர்.பி.உதயகுமாருடன் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர்கள் முருகையாபாண்டியன், சுப்புராம், சாத்தூர் யூனியன் சேர்மன் வேலாயுதம், சாத்தூர் நகர துணை சேர்மன் கிருஷ்ணன், நகர செயலாளர் வாசன், முத்துராமலிங்கம், கணேசன், முருகன் மற்றும் அந்த பகுதி கிளைச்செயலாளர்கள், ஊராட்சிமன்ற செயலர்கள் ஆகியோர் வந்திருந்தனர். முன்னதாக வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வெம்பக்கோட்டை ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் கட்சி பிரமுர்கள் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏவை வரவேற்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்