முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் நிறைவேறுமா? சோனியா மழுப்பல்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 29 - லோக்சபையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா ராஜ்யசபையில் நிறைவேறுமா? என்று கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திணறிப் போனார். ஆனாலும் நிருபர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியதால் வெறுத்துப் போன சோனியா, அவர்களுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். 

பாராளுமன்ற லோக்சபையில் லோக்பால் மசோதா நிறைவேறி விட்டது. ஆனால் ராஜ்யசபையில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறிதான். காரணம், அங்கே அரசுக்கு மெஜாரிட்டி இல்லை. இது குறித்து நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ராஜ்யசபையில் மெஜாரிட்டி இல்லையே? எப்படி அரசு இதை நிறைவேற்றப் போகிறது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் சோனியா அதற்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும் நிருபர்கள் விடவில்லை. திரும்பத் திரும்ப அதையே கேட்டனர். இதனால் வெறுத்துப் போன சோனியா அவர்களுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

முன்னதாக, அவர் பாரதீய ஜனதா கட்சியை குற்றம் சாட்டினார். லோக்சபையில் நேற்று முன்தினம் லோக்பால் மசோதா நிறைவேறியது. ஆனால் அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதற்கு பாரதீய ஜனதாவே காரணம் என்று சாடினார் சோனியா காந்தி. அவர்களது சுயரூபம் தெரிந்து விட்டது என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். நிலைக்குழுவில் பா.ஜ.க. இதை ஆதரித்தது. ஆனால் ஓட்டெடுப்பின் போது அவர்கள் உண்மையான முகத்தை காட்டி விட்டார்கள். அவர்கள் சுயரூபத்தை நாங்கள் பார்த்தோம் என்று ஆவேசமாக கூறினார் சோனியா காந்தி. மசோதாவுக்கு பலம் கொடுக்க நாங்கள் விரும்பினோம். ஆனால் அவர்களோ அதை விரும்பவில்லை. அதனால்தான் எதிர்த்து வாக்களித்து விட்டார்கள் என்றும் சோனியா காந்தி சாடினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்