முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடிட்டர் வழக்கில் காஞ்சி - ஜெயேந்திரர் நேரில் ஆஜராக வேண்டும்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. - 4 - சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002-ல் அவர் வீட்டில் இருந்த போது மர்ம மனிதர்களால் தாக்கப்பட்ட வழக்கில் - காஞ்சி ஜெயேந்திரர் உள்பட 10 பேர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மந்தவெளியில் தனது வீட்டில் இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு ஒரு சில மர்ம மனிதர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்கப்பட்ட சம்பவத்தை பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் காஞ்சிபுரம், காஞ்சி வரதராஜ பெருமாள் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திரன் விஜயேந்திரர், சுந்தரேசஐயர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின்போது ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் காஞ்சிஜெயேந்திரருக்கு தொடர்பு உள்ளது என்று தெரிய வந்ததை அடுத்து, காஞ்சி ஜெயேந்திரர், சுந்தரேச ஐயர், ரகு கதிரவன், சுந்தர், ஆனந்த் லட்சுமணன், பூமிநாதன், குமரன், ரவிசுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ரவிசுப்பிமணியம் மட்டும் அப்ரூவராக மாறினார். இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி கலாவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்கில் சம்மந்தப்பட்ட சுந்தரேசஐயர், ரகு, லட்சுமணன், பூமிநாதன், குமரன் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள். மற்றவர்கள் ஆஜராவதற்கு விலக்களிக்கும்படி அவர்களது வக்கீல்கள் தனித்தனியே மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- அரசு வக்கீல் விஜயன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த வழக்கின் சாட்சி விசாரணை வருகிற ஜன.12-ம் தேதி முதல் தொடங்கும். எனவே இந்த வழக்கின் அப்புரூவர் ரவி சுப்பிரமணியத்தை ஜன.12-ம் தேதி ஆஜர்படுத்தவேண்டும். அன்று விசாரணை தொடங்க உள்ளதால் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காஞ்சி, ஜெயேந்திரர், சுந்தரேசஐயர் உள்பட 10 பேர் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கலாவதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்