முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி மீது ஊழல் புகார் - எதிர்க்கட்சிகள் அமளி

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 15 - மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் லஞ்ச ஊழல் புகாரில் ஈடுபட்டுள்ளார் என்றும், எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை அடுத்து சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் நேற்று பா.ஜ.க.வை  சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மீது லஞ்ச ஊழல் புகார் எழுந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

பஞ்சாப் மாநிலத்தில் பூத் ஒதுக்கீடு செய்ததில் பல முறைகேடுகளை பன்சால் நடத்தியுள்ளார் என்று ஒரு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் எனவே இது குறித்து சபையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேலும் லஞ்ச ஊழலில் தொடர்புடைய பன்சால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பா.ஜ.க.வினரின் கோரிக்கையை ஏற்க துணை தலைவர் ரெஹ்மான்கான் மறுத்தார்.  இதனால் பா.ஜ.க .உறுப்பினர்கள் சபையை நடத்தவிடாமல் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்த ரெஹ்மான்கான் மேற்கொண்ட முயற்சிள் எல்லாம் வீணானதால் சபையை பிற்பகல் 2 மணி வரை துணை தலைவர் ரெஹ்மான்கான் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!