முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.டி.யில் சென்சார் நெட்வொர்க பற்றிய 2 நாள் சர்வதேசமாநாடு

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

வேலூர்,ஜன.- 21 - வி.ஐ.டியில் நடைபெறும் சென்சார் மற்றும் தன் தொடர்புடைய நெட்வொர்க் சம்மந்தமான 2 நாள் சர்வதேச மாநாட்டை தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வி.ஐ.டி.யில் பல்கலைக்கழகத்தில் சென்சார் மற்றும் அதன் தொடர்புடைய நெட்வொர்க் (சென்னட் 12) பற்றிய 3-வது சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பள்ளி, நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை ஜெர்மன் நாட்டின் யுனிவர்சிட்டி ஆப் அப்லைடு சயின்ஸ் மற்றும் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இம்மாநாட்டில் சென்சார் மற்றும் அதன் தொடர்புடைய நெட்வொர்க் சம்மந்தமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு எடுக்கப்படஉள்ளன. மாநாடு தொடக்க விழா  வி.ஐ.டியில் உள்ள டாக்டர்.எம்.சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வி.ஐ.டி துணைவேந்தர் முனைவரி வி.ராஜூ தலைமை வகித்தார். விழாவிற்கு வருகைத் தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ஜெயபி.ரெய்னா வரவேற்றார். மாநாட்டின் நோக்கம் பற்றி மாநாடு அமைப்பாளர் முனைவர் இசட்சி.அலெக்ஸ் எடுத்துக்கூறினார். மாநாட்டை ஆந்திர மாநிலம் கடங்கியில் அமைந்துள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:- 

தேசிய வளிமண்டல ஆராயாச்சி ஆயவகமானது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையின் காரணமாக தட்ப வெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வளி மண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ரேடார் கருவிகளை பயன்படுத்து வருகிறோம். அதற்கான செலவினம் அதிகமாக உள்ளதால் சென்சார் நெட்வொர்க் மூலம் ஆராய்வதற்கு லைடார் என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொறியியல் மாணவர்கள் வளிமண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும். அறிவியல் நிபுணர்கள் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி பணிகளில் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். அதனை எங்கள் ஆய்வகமும் செய்து வருகிறது என்றார். விழாவில் மாநாட்டு மலரை பேராசிரியர் ஏ.ஜெயராமன் வெளியிட அதனை வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக்கொண்டார். விழாவில் மாநாட்டை தொடங்கி வைத்த பேராசிரியர் ஏ.ஜெயராமனுக்கு வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.சம்பத்தும், கெளரவ விருந்தினராக பங்கேற்ற நரம்பியல் நிபுணரும் சென்னை அப்போலோ மருத்துவமனை தொலை மருத்துவ தலைவர் டாக்டர்.கணபதிக்கு வி.ஐ.டி துணைவேந்தர் முனைவர் வி.ராஜூம் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர் காமாட்சிமுதலி, வி.ஐ.டி இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், ஜெர்மனி அப்லைடு சயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தொரஸ்டன் லெய்சி ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் வி.ஐ.டி மின்னணு பொறியியல் பள்ளி இயக்குநர் பேராசிரியை முனைவர் தொரஸ்டன் லெய்சி ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் வி.ஐ.டி மின்னணு பொறியியல் பள்ளி இயக்குநர் பேராசிரியை முனைவர் எலிசபெத் ரூபஸ் நன்றிகூறினார்.  null

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்