முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாநகராட்சிக்கு கட்டடம்: முதல்வர் திறந்துவைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (24.1.2012) தலைமைச் செயலகத்தில், திருப்ர் மாநகராட்சிக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தினையும், சிவகாசி நகராட்சியில் 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையினையும் திறந்து வைத்தார். திருப்ர் மாநகராட்சி அலுவலகம் நன்முறையில் நவீன வசதிகளுடன் பொது மக்களின் வசதிக்காக விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், திருப்ர் மாநகராட்சிக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  நான்கு தளங்களைக் கொண்டுள்ள  இவ்வலுவலகக் கட்டடம், அலுவலர்கள் அறைகள், அனைத்து பிரிவுகளுக்கான அலுவலக இடம்,  இரண்டு கருத்தரங்குக் கூடங்கள், கணினி மையம், கணிணி மயமாக்கப்பட்ட வசூல் மையம் மற்றும் பதிவறை உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டது. இப்புதிய அலுவலகக் கட்டடத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

சிவகாசி நகராட்சியில், சாத்துர் சாலையில் 1.64 ஏக்கர் இடத்தில், 188 சதுர மீட்டர் பரப்பளவில் 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை,  இறுதிச் சடங்கு நிறைவேற்றும் மண்டபம்,  தியான மேடை, வளாகம் முழுமைக்கும் மக்கள் எளிதில் சென்று வர சிமெண்ட் தளம், நவீன கழிப்பறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன எரிவாயு தகன மேடையினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்