Idhayam Matrimony

என்.ஆர்.சிவபதி - சுப்பிரமணியம் அமைச்சர்களாக நியமனம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.27 - தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று தமிழக கவர்னர் ரோசைய்யா, புதிய அமைச்சர்களாக என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோரை நியமித்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கவர்னர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை பொறுப்பு வகித்துவந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.சிவபதி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வருவாய்த்துறை பொறுப்பு கே.ஏ.செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்