Idhayam Matrimony

திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக ரயில்கள் சென்ற சம்பவம்: ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 3 பேர் தற்காலிக பணி நீக்கம்:

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிக்னல் பழுதானதால் ஒரே தண்டவாளத்தில் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் நேருக்கு நேர் சென்ற சம்பவம் தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து செங்கோட்டை சென்றிடும் பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலம் ரயில் நிலையம் வந்துள்ளது.அதே சமயம் செங்கோட்டை யிலிருந்து மதுரைக்கு சென்றிடும் பாசஞ்சர் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ரயில்களுக்கு சிக்னல் கொடுத்திடும் இயந்திரம் பழுதடைந்தது.இருப்பினும் திருமங்கலம் ரயில்நிலைய அதிகாரி முறையான அனுமதி பெற்று செங்கோட்டைக்கு சென்றிடும் பாசஞ்சர் ரயிலை விருதுநகர் மார்க்கத்தில் சென்றிட அனுமதியளித்துள்ளார்.இதையடுத்து மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் திருமங்கத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி கிளம்பிச் சென்றுள்ளது.இதனிடையே கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிலைய அதிகாரி திருமங்கலத்திலிருந்து ரயில் வருவதை அறிந்திடாமல் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயிலை திருமங்கலம் நோக்கி சென்றிட  தவறாக அனுமதி கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து திருமங்கலத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி சென்ற மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும், கள்ளிக்குடியிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சென்ற செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக வந்துள்ளது.
இதனை அப்பகுதியிலுள்ள ரயில்வே கேட்களில் பணியிலிருந்த கேட்கீப்பர்கள் கண்டறிந்து கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக சென்று கொண்டிருந்த இருரயில்களையும் தொடர்பு கொண்ட நிலைய அதிகாரிகள் வாக்கிடாக்கிகள் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்திடுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி ரயில்களை நேருக்கு நேராக சென்றிட அனுமதி கொடுத்த சிக்னல் கண்ட்ரோலர் முருகானந்தம்,திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவ்சிங்மீனா ஆகிய மூன்று பேரும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் நேற்று காலை திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரயில் நிலையங்களில் ரயில்வே உயரதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சம்பவத்தின் போது பணியிலிருந்து இதர ரயில்வே ஊழியர்கள் மற்றும் கேட்;கீப்பர்களிடம்  விசாரணை நடத்தினார்கள்.
பயணிகள் போராட்டம்,சிக்னல் பழுது,வடமாநில ஸ்டேஷன் மாஸ்டரின் தவறான தகவல் தொடர்பு,விபத்தினை தடுத்து நிறுத்திய கேட்கீப்பர்கள்,பெரும் விபத்து தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 3பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு ரயில்வே ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து